எனது நண்பர் வெற்றி வேந்தன் அவர்கள் மெயில் முலம் எனக்கு அனுப்பியது

இரண்டு லட்சம் கொடுத்து
வாங்கினேன் - அரசு வேலை
லஞ்ச ஒழிப்பு துறையில் ......

வெள்ளை என்பது சமாதனம் அல்ல
பேசிகொன்டன மீன்கள்
கரையில் கொக்கு !

மறு கன்னத்தையும்
காட்டினேன்
அடித்தது காதலி

மழை பெய்யா நாட்களிலும்
மஞ்சள் குடையோடு வரும்
திலகவதி டீச்சர்
வகுப்பின் முதல்நாளன்று
முன்பொருமுறை எங்களிடம் கேட்டார்
"படிச்சி முடிச்சதும்
என்ன ஆகப் போறீங்க ?".

முதல் பெஞ்சை யாருக்கும்
விட்டுத்தராத உஷாவும் வனிதாவும்
"டாக்டர்" என்றார்கள் கோரசாக!

இன்று கல்யாணம் முடித்து
குழந்தைகள் பெற்று
ரேசன்கடை வரிசையில்
உஷாவையும்
கூந்தலில் சொருகிய சீப்புடன்
குழந்தைகளை பள்ளிக்கு வழியனுப்பும்
வனிதையும்
எப்போவதாவது பார்க்க நேர்கிறது

"என்ஜீனியர் ஆகப் போகிறேன் "
என்ற அருண்குமார்
பாதியில் கோட்டடித்து
பனியன் கம்பெனி வேலைக்கு
போய்விட்டான்

"எங்க அப்பாவுடைய
இரும்புக்கடையைப் பாத்துப்பேன் "
கடைசி பெஞ்சு சந்திரபாபு
சொன்ன போது
எல்லாரும் சிரித்தார்கள்
இன்றவன் ஆஸ்திரேலியாவில் MBA
படித்துக்கொண்டே டாலராக
சம்பாதிக்கிறான்

அனுவிஞாநியாவேன் என்று சொல்லி
ஆச்சரியங்களில் எங்களை தள்ளிய
ஆனந் இப்போது
TNPSC எழுதி
கடைநிலை உழியனானான்

ப்ளைட் ஓட்டுவேன்
என்ற நான்
கணினியை துடைத்தபடி
காலம் தள்ளுகிறேன்

வாழ்க்கை காற்று எல்லாரையும்
திசைமாற்றி போட
" வாத்தியாரவேன் " என்று சொன்ன
குண்டு சுரேஷ் மட்டும்
நாங்கள் படித்த அதே பள்ளியில்
ஆசிரியராக பணியாற்றுகிறான்

" நெனச்ச வேலையே செய்ற
எப்படிருக்கு மாப்ளே ?" என்றேன்

சாக்பீஸ் துகள்கள் படிந்த விரல்களால்
என்கையை பிடித்து
" படிச்சு முடிச்சதும் என்ன
ஆகப் போறீங்க ?" ன்னு
என் மாணவர்களிடம்
நான் கேட்பதே இல்லை " என்றான் ......

என்னிடம் சிறு மனஸ்தாபம் கொண்டு விலகிய என் தோழிக்கு நான் எழுதி கொடுத்த கவிதை இது

தோழியே ......

நீ எதிர்பார்கிறபடி நடப்பதற்காக
நான் இவ்வுலகில் பிறக்கவில்லை

நான் எதிர்பார்கிறபடி நடப்பதற்காக
நீயும் இவ்வுலகில் பிறக்கவில்லை

உன்வேலையை நீ பார் !
என் வேலையை நான் பார்கிறேன் !

வாழ்க்கை சுழற்சியில் என்றாவது ஒரு நாள்
நாம் சந்திப்போமானால் - அன்று
ஒரு நாள் மட்டும் நட்பு கொள்வோம்

ஏனென்றால்

நிறைவேற பொறுப்புகள் பல காத்துகொண்டிருக்கின்றன
உனக்கு மட்டுமல்ல எனக்கும் தான் .......

மரணிக்கு முன் ஒரு நிமிடம்
எழுதிவிடுகிறேன்
உங்கள் தீராத
மனப் பக்கங்களில்

ஒவ்வொரு முறை
இதயம் துடித்து
அடங்கும் போதும்
ஓராயிரம் எண்ணக் குமுறல்கள்
இதயத்தின் ஓரத்தில்
உடைப்பெடுத்து
ஆங்காங்கே அடைத்துப்
பின் பெருவலியோடு
மூளையில் மையம் கொள்ளும்

பலருக்குத் தொண்டைக் குழிக்குள்
அடைந்து கொண்டவைதான்
எனக்கோ விரல்களின் வழியே
வீழ்கின்றன
இவைகளை
எழுதாத இரவுகள்
இனப் படுகொலைகளைப் போலவே
முடிவின்றி நீள்கின்றன

ஒருபுறம்
இனங்களுக்கிடையே போராட்டம்
மறுபுறம்
ஓரினத்திற்குள்ளேயே மாறாட்டம்
எதைத் தொட
எதை விட... ?

இரவின் நிசப்தத்தைக்
கிழித்துச் செல்லும்
பல்குழல் எறிகணை போல்
ஓங்காரமாய் ஓலமிடும்
இனவெறிகள்

கறைகளோடே
சுத்தம் பற்றிப் போதிக்கும்
நம் சாதீயச்
சவர்க்காரங்கள்
எத்தனைமுறை வெளுத்தாலும்
கரைவதேயில்லையே ஏன்?

இவைகளை
எழுதாத இரவுகள்
இனப் படுகொலைகளைப் போலவே
முடிவின்றி நீள்கின்றன...

நாங்கள் செல்லும் பாதைகளிலெல்லாம்
மேடு பள்ளங்கள் கிடையாது - ஆனால்
குண்டும் குழியும் நிறையவே உண்டு
குறுகிக்கொண்டு ஒளிந்து கொள்ள.

எங்கள் பள்ளித் தோட்டத்தில்
பூக்கள் கூட நிலைத்திருக்கும்
வகுப்பில் உள்ள பிஞ்சுகளுக்கோ
எந்த நிமிடமும் முள்ளிருக்கும்.

வேலைக்குச் செல்லும் கணவனின் வாகனம்
அழகாய் ஓரத்தில் நின்றிருக்கும்
கண்ணீரோடு யோசிக்கும் மனைவி
எந்தத் துப்பாக்கி அவரைக் கொன்றிருக்கும்?

அம்மா வாங்கிய மளிகைப் பொட்டலம்
அலுங்காமல் அப்படியே தரையிருக்க
அம்மா வந்தாளே பொட்டலமாய்
எங்கே சொல்லி அழுது தீர்க்க?

தேவைகளைப் பூர்த்தி செய்ய
தேவைப் பட்டதை வாங்கினோம்
அவை இன்று தேவையில்லை
பதுங்கு குழியில் இடமுமில்லை.

கடலில் துளியாய் எங்கள் தேசம்
தேசம் முழுதும் கண்ணீர்த் துளிகள்
துளித்துளியாய்ப் போகின்ற அப்பாவி உயிர்கள்
உயிர்களற்ற தேசத்திற்குப் போராட்டம் ஏனோ?

கவர்ன்மெண்ட் ஆபீசர்

வ‌ெ‌ட்டியா‌ன் 1: செத்துப் போனவர் கவர்ன்மெண்ட் ஆபீசர்னு எப்படி சொல்ற?

வெ‌ட்டியா‌ன் 2 : நீட்டின கையை மடக்கவே முடியலையே

?!?!?!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

என்ன சார் உங்க பத்திரிகைக்கு இவ்வளவு ஜோக்ஸ் அனுப்பி வச்சுருக்கேன் எதுக்குமே பணம் தரமாட்டேண்றீங்களே?

இது கூட நல்ல ஜோக்தா‌ன்! ஆனா இதுக்கும் பணம் தர முடியாது!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அண்ணாச்சி கடையில போய் திருடணும்னா உனக்கு என்ன தைரியம்?

எடுத்துக்கோ எடுத்துக்கோ அண்ணாச்சி கடையில எடுத்துக்கோன்னு அவங்கதான எசமான் விளம்பரம் செஞ்சாங்க!

ஓடி மறைந்துகொள் பாப்பா - நீ
ஒளிந்து வாழப்பழகிக்கொள் பாப்பா
பங்கருக்குள் முடங்கிக்கொள் பாப்பா - நீ
பதுங்கி வாழப்பழகிக்கொள் பாப்பா

சிங்களப் படைகள்வரும் பாப்பா - வானில்
சீறும் விமானம்வரும் பாப்பா
எங்களுக்கெனக் குரல்கொடுக்க உலகில் - மனிதர்
எவரும் இல்லையடி பாப்பா

சினத்தோடு வந்தான் எதிரி பாப்பா - எம்மை
இனத்தோடு அழிக்க நினைத்தான் பாப்பா
வனத்தில் விலங்குகளாய் ஆனோம் பாப்பா -எம்
மனத்தில் சோகங்கள் ஆயிரம் பாப்பா

பகைவனுக்கு வேண்டியது சண்டை - அவன்
வகைவகையாய் வீசினான் குண்டை
புகைமண்டலமாய் ஆனதெம்தேசம் - பார்த்து
நகைக்கிறான் எதிரி பாப்பா

தெய்வமும் மறந்ததடி பாப்பா - வெறி
நாய்கள் சூழ்ந்ததடி பாப்பா
பொய்யும் வெல்லுதடி பாப்பா - இன்று
பேய்களின் ஆட்சியடி பாப்பா

யுத்தத்தில் வாழ்கிறோம் பாப்பா - குண்டின்
சத்தத்தில் மாய்கிறோம் பாப்பா
இரத்ததில் தோய்கிறோம் பாப்பா - நாம்
மொத்தத்தில் பாவிகளடி பாப்பா

காக்கை குருவிஎங்கள் ஜாதி - இவற்றோடு
காட்டில் வாழ்கிறோம் பாப்பா
தேளும் பாம்பும் புடைசூழ - நாம்
நாளும் வாழ்கிறோம் பாப்பா
தமிழராய்ப் பிறந்துவிட்டோம் பாப்பா - நம்
தலைவிதி இதுதான் பாப்பா

சமீபத்தில் இணையத்தில் நான் படித்தது

இந்த சில நாட்களுக்கு முன்னர் நான் எனது வண்டியில் சென்று கொண்டிருக்கும் போது சிறிய விபத்து ஒன்று ஏற்பட்டது , நான் வண்டியில் இருந்து நிலைதடுமாறி ரோட்டில் விழுந்து விட்டேன் , கிழே விழுந்து கிடந்த என்னை தூக்கிவிட பலர் வந்தனர் அதில் ஒரு மலையாளியும் ஒருவர் ,

இதை ஏன் இங்கே சொல்லுகிறேன் என்றால் ஒரு தமிழன் இங்கு விழுந்ததிற்கு அவனுக்கு கைகொடுக்க பலர் வந்தனர் , ஆனால் இலங்கையில் எனது உறவினர்கள் கொட்டு கொத்தாக குண்டு வீசி கொன்றபோதும் இப்போது அகதிகள் என்ற பெயரில் திறந்த வெளி சிறைச்சாலையில் அவர்களை அடைத்து ஒருவேளை உணவுமட்டும் கொடுத்து சிறிது சிறிதாக கொள்ளப்படும் என் சொந்தங்களுக்கு கைகொடுக்க யாரும் வரவில்லையே ???? ஏன் ? தெரிந்தால் யாரும் சொல்லுங்கள் , மனிதநேயம் இவ்வளவு தானா ? , கண்முன் நடந்தால் மட்டுமே உதவிக்கு ஆள் வருவார்களா , ஒருவேளை ஈழ தமிழர்கள் நிலைமை தமிழ் நாட்டு மக்களுக்கு வந்தால் நமக்கும் அந்த கதி தானா ?

நான் ஓர்குட் வன்னியர் குழுவில் நிர்வாகியாக இருக்கிறேன் , நான் முன்பே வன்னியர் கவிதை ஒன்று எழுதி இருந்தேன் அக்குழுவின் உறுப்பினர் நண்பர் கார்த்தி என்பவரும் ஒரு கவிதை எழுதி இருந்தார் , இந்த இரண்டு கவிதைகளையும் குழுவின் முகப்பில் போடுமாறு குழு உரிமையாளர் மணிகண்டன் அவர்களிடம் சொல்லிருந்தேன் ஆனால் அதிக வார்த்தைகள் இடம்பெற இயலாது என்று மணிகண்டன் எனது கவிதை மட்டும் இடம்பெற செய்துவிட்டார்

நண்பர் கார்த்தி என்னை விட நன்கு கவிதை எழுதும் திறன் கொண்டவர் , குழுவில் எனது கவிதை மட்டும் இடம் பெறுவதால் என்னை ஏதும் தவறாக கருதுவாரோ என்று வருத்தமாக இருக்கிறது

நண்பர் கார்த்தியின் வலைபூ : http://karthikkavithaigal.blogspot.com/

வெள்ளித்திரையில் நான் கண்ட காதல் உண்மையென்று கருதி,
உன்னிடம் கெஞ்சினேன் மன்றாடினேன்.

நீயோ அதற்க்கு செவி சாய்க்கவுமில்லை,
மனமிறங்கி என்னை ஏற்கவுமில்லை.

உடைந்த இதயத்துடன் உன்னை மறக்கத்துடங்கிய நாட்களிலும்,
காலம் கற்றுத்தந்த கசப்பான பாடங்களை நான் மறக்கவில்லை.

மூன்று மணி நேர திரைப்படமும்,
நிஜமான வாழ்க்கையும் வேவ்வேறே!
இதை உணராமல் போனதும் என் தவறே.

காலம் கடந்து நான் கற்ற உண்மைகள்,
காலபோக்கிலும் மாறாதவைகள்.

ஆம், காதலுக்காக வாழ்க்கையை தியாகம் செய்வதில் பயனில்லை.
வாழ்க்கையில் ஜெயித்து காட்டினால், காதலுக்கோ பஞ்சமில்லை.


--இப்படிக்கு உன் நண்பன்.

Lunax Free Premium Blogger™ template by Introblogger