என்மனம் நெடுஞ்சாலைபோல் நீண்டுகிடக்கிறது
உன் நினைவுகள் மட்டும் அதில் நடை போடுகிறது !
யாரென்றே தெரியாமல்!

உன் கல்லறைக்கு கோட்டைக்கட்ட
நான் கோமாளியும் இல்லை
நீ வாழும்போது கோட்டைக்கட்ட
நான் மகாராஜாவும் இல்லை !

நான் சுவாசிக்கும் காற்றைவிட மேலான
நேசிக்கும் காதலை கலந்து உலவவிட்டு
ஒரு குட்டி வீடு கட்டித்தருவேன்

கரிதுகள்களின் கன்னங்கள் சிவக்கிறது
எரிவதால் என்று எனக்கு தோன்றவில்லை
என்னை போல் யாரையோ காதலிப்பதால்தான் !

நானும் பலாக்கனி தான்
முரட்டு உருவதிற்குபின்னால்
உன்னை பற்றிய சுவையான
நினைவுகளோடு வாழும் தடியன் !

ஓடி ஒளிவது சூரியனானாலும்
உருவங்கள் மறைவது பூமியில்தான்
உன்னை தேடியலைவது என் நினைவுகளானாலும்
தேயாமல் வளர்வது என் காதலடி !

என் இனியவளே....

அன்று ஒற்றை ரோஜாவை உன்னிடம் தந்தேன்....
என் காதலை வெளிப்படுத்த.......

ஆனால் நீயோ அதை காலால் நசுக்கி
உன் வெறுப்பை வெளிகாட்டினாய்....

இன்று ஒரு பூங்கோத்தையே.....
என்னிடம் சமர்பிக்கின்றாய்.....

ஆனால் அதை உன்னிடமிருந்து வாங்க தான்
எனக்கு அனுமதியில்லை ....

ஏன் கல்லறையிடமிருந்து!!!!!!

உனக்காக தான் பூக்கள் பறித்து வர செல்கிறேன்,
இதை பிரிவு என்று எப்படி சொல்கிறாய்………..

உன்னிடம் பேச தான் சொற்கள் தேடி கொண்டிருக்கிறேன்,
இதை மௌனம் என்று எப்படி சொல்கிறாய்………….

உன்னை என் மனதோடு தானே ஒட்டி வைத்து இருக்கிறேன்,
இதை வெறும் நட்பு என்று எப்படி சொல்கிறாய்…………….


தாயே என்ன பிழை செய்தோமடித் தாயே!

தாயே என்ன பிழை செய்தோமடித் தாயே!

வெடிவிழுந்து எரிந்த பனை
கரை உடைந்து காயந்த குடம்
கூரை சரிந்த எமது இல்லம்
குருதி வடிந்த சிறு முற்றம்

இரவை கிழித்த பெண்ணின் கதறல்
ரத்தம் வடிந்த குழந்தை பொம்மை
என் தேசம் பதுங்கு குழியின் உள்ளே
புதைய சம்மதமா?

தாயே என்ன பிழை செய்தோமடித் தாயே!

விளக்கேந்திய மாடமெல்லாம் விழுந்தே போனதோ!
ஊஞ்சலாடிய முயலை
நீந்திப்பழகிய வாவி எல்லை

என் தோப்பில் அடைந்த பூங்குருவிகள் எங்கு போனதோ
என் தோட்டத்தில் ஈன்ற தாய் பூனை என்ன ஆனதோ

முற்றம் தெளித்திட விடியல் வருமோ!
யுத்த யாமத்தில் வாழ்வு முடியுமோ!

தாயே என்ன பிழை செய்தோமடித்தாயே!


மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஈழம் – நேற்றும் இன்றும்
தொடரின் தலைப்பு பாடல் இது.

உன்னோடு . . .
உன் வீட்டிற்கு வந்தால்
கொதிக்கும் தேனீர் கொடு
ஐந்து நிமிடங்கள் அதிகமாய்
இருக்கலாம் உன்னோடு . . .

எழுந்துவிட்ட அதிகாலை,

எழுப்பிவிட்ட கடிகாரம்,

காத்திருக்கும் கடமை,

அலரும் அழைபேசி ,

காதலியின் நினைவுகள்,

சர்க்கரை அதிகமாய் என்று
கேட்டு வாங்கி குடிக்கும் வீட்டு முற்றத்தின் கடைத்தேநீர்,

இயந்திரம் தந்த இதமான வெந்நீர்,

விரும்பிய இசைபாடும் குறுவட்டு,

சுகமாய் பயணிக்க காத்திருக்கும் வாகனம்,

சற்று கணத்துடன் மணிபர்ஸ் ,

இரவு சந்திப்போமா என்ற ஏக்கத்துடன் படுத்திருந்த மெத்தை,

எனக்கென்றே காத்திருக்கும் வாழ்வின் புத்தம் புது நாள்,

இத்தனை இருந்தும் ஏதோ இழப்பதாய் உணர்வு,

இரவு எப்போது வரும் என்று ஏங்குகிறேன்,

நாளைய காலையின் விழிப்பிலாவது

தாயின் , "மணி எட்டு ஆச்சு இன்னும் தூக்கத்த பாரு" எனும் குரல் கேட்காதா

என்ற எதிர்பார்ப்போடு…..

இங்ஙனம்,
பாசத்தைக்கூட தவணை முறையில் பெறும்,

குமரேசன்
திரவியம் தேடி சென்னை வந்தவன்


என்ன தவறு செய்தேன் ?
புரியவில்லை .
ஏனோ -
இப்போதெல்லாம்
ஏறெடுத்தும் பார்ப்பதில்லை !

வாரம் ஒருமுறையல்ல...
மாதம் ஒருமுறை?
வேண்டாம் .....
இரண்டு மாதங்களுக்கு
ஒருமுறையாவது போதும்!

பார்வை தரும் சுகத்தைவிட
வெறுப்பு தரும் வேதனையை
ஜீரணிக்க முடிவதில்லை !

என்னைப் பற்றிய
தகவல்கள் தவறாக இருக்கலாம்!
ஆனால்
நான் தவறாவன் அல்ல!

எண்ணப் பற்றிய
கணிப்புகள் தவறலாம்!
ஆனால் ,
உன் மெது என் காதல்
தவறானதல்ல !

என்னைப் பற்றி
யாரோ முடிவு செய்வதைவிட
நியாக முடிவு செய்!
உன் முடிவு
எதுவானாலும் ஏற்றுக்
கொள்கிறேன் !

என் மிதான வெறுப்புக்கு
எது காரணம் ?
காரணம் எதுவாக இருப்பினும்
அது -
உன் முடிவாக இருப்பின் சரி !

என் வாழ்வையும் மரணத்தையும்
உன் முடிவு மட்டுமே
முடிவு செய்வதாய் இருக்கட்டும் !

இப்படிக்கு
உன்னை காதலித்த குற்றத்திற்காக உன் இதய சிறையில்
இடம்வேண்டி காத்திருக்கும்
~~~~~ குமரேசன்

என் உயிர்கூட எனக்கு
சொந்தமில்லை
ஏனென்றால் அது
ஏற்கெனவே அவளுக்காக
உயில் எழுதப்பட்டுவிட்டது

இரண்டு லட்சம் கொடுத்து
வாங்கினேன் - அரசு வேலை
லஞ்ச ஒழிப்புத்துறையில் ......

Lunax Free Premium Blogger™ template by Introblogger