நீயும் பேசாதே
நானும் பேசாதிருக்கிறேன்
நாட்கள் மட்டுமல்ல
வருடங்களும் ஓடின
நீ பார்க்கும்போதெல்லாம்
எனக்குள்
இன்னும் அதே வலி!
உனக்கும்தான் வலிக்கும்
என் பார்வை
உன்னில் படர்கையில்
ஆக..
பார்வையாகவே உயிர்த்திருக்கிறது
நம்முள் மௌனமாய்
நமக்கான காதல்

பாதையோரத்துப் பாவங்களின்
விழியோரத்தில் நீர்ப்பூக்கள்..

தேசீயக் கொடிக்கம்பம் போல்
மெலிந்த தேகங்கள்
வாழ்விலும் தேக்கங்கள்...

வாழ்க்கையில் சாவைப் பார்த்துவிட்டு
சாவிலே இன்பம் காணத் துடிப்பவர்கள்...

இவர்களுக்கு வசந்தம் வருவதேயில்லை
சிலர் அதை ஆயுள் குத்தகை எடுத்ததால்..

மாதம் ஒருமுறை
வானத்தில் தோசை தரிசனம்..
பிற நாட்களில் மௌன அமாவாசை...

தூக்கத்தில் கூட
துக்கக கனவுகள்..

இவர்களுக்கு விழிப்புணவு வராமல்
பார்த்துக் கொள்ளும் இன்றைய சினிமாக்கள்...
கதைகளில் வாலிபத்தைக் காட்டி
நிஜங்களை கிழமாக்குபவர்கள்...

உழைத்துச் சலித்த இந்த ஊமையர்களை
குருடராக்கவும் செய்யும் ரசவாத வித்தைகள்...

இனி
ஒரு விதி செய்வோம்
அதை விளக்கமாய் வீதியில் வைப்போம்!

ரோசாப்பூ மனசுக்காரி
ரோசமுள்ள கோவக்காரி
ஆச வச்சேன் அவமேல
மீச வச்சேன் ஒதட்டு மேல
குளத்தங்கரைப் படிக்கட்டுல
குளிக்க வருவா வெடலப் புள்ள

கண்ணாலம் பண்ணவான்னு
கண்ணால கேட்டுப்புட்டேன்
முட்டக் கண்ணு சிவந்திருச்சு
கெட்ட கோவம் வந்திருச்சு
தப்புக் கணக்குப் போட்டுப்புட்டா
மைனருன்னு நினைச்சுப்புட்டா
பஞ்சாயத்தக் கூட்டிப்புட்டா
பருத்திபோல வெடிச்சுப்புட்டா
ஊர் கூடி திட்டினாக
உறவெல்லாம் சிரிச்சாக
மான மருவாதி கப்பலேறியாச்சு
ரெண்டாயிரம் கப்பங் கட்டியாச்சு

அவ மேல ஆசப்பட்ட கதைய
எவகிட்ட சொல்லி அழுவ?
மண்ணுக்குள்ள வயிரம்போல
மனசுக்குள்ள காதல் கெடக்கே!
ரெண்டு நாளு பட்டினி கெடந்தேன்
பட்டணம் போக மூட்ட கட்டுனேன்
கருத்தப் புள்ளய காதலிச்ச கதய
கடுதாசியில இறக்கிவெச்சேன்

வெடுவெடுன்னு நடந்து போயி
வீசிப்புட்டேன் அவ மேல
திரும்பிக்கூடப் பார்க்காம
பதிலேதும் கேட்காம
வீறாப்பாக் கெளம்பி
வெரசா ரயிலப் புடிச்சுப்புட்டேன்
வெறப்பா வந்தாலும்
முறப்பா நின்னாலும்
உள்ளுக்குள்ள துடிதுடிக்குது
உசிருக்குள்ள அவ நினப்பு!
புகையக் கக்கிப்புட்டு
கெளம்புது செவத்த ரயிலு!
ரயிலுக்கும் எரியுமோ
என்னப்போல உள்மனசு?
கண்ண மூடி ஒக்காந்தா
கனவுல அவ முகம்
கண்ணு முழிச்சுப் பார்த்தா
எதிர்தாப்புல அவமுகம்!
கனவா நனவான்னு
தெரியாம நா(ன்) குழம்ப
முத்துப்பல்லு காட்டி
முல்லப்பூ அவ சிரிக்கா!
கண்ணால புரியாத காதல
கடுதாசியால புரிஞ்சிருக்கா
ஓன்னு அழுதிருக்கா
ஓடோடி வந்திருக்கா
தாலி கட்டப் போறேன்
தாரமாக்கப் போறேன்
பட்டணம் போயி, பத்தாயிரம்
சம்பாதிக்கப் போறேன்
கண்ணாலம் பண்ணப்போறேன்
கருத்த புள்ளகூட வாழப்போறேன்
ஏலேய் ட்ரைவரு!
வெரசா ஓட்டு இது ரயிலு வண்டியா
இல்ல கட்ட வண்டியா?

இணையதளத்தில் நான்
உன்னிடம் அறிமுகமானாலும்
என் இதையத்தின் அடித்தளம்
வரை நீ சென்று விட்டாய்..!

குறையாத ஒலியோடு
குறுந்தொகை செய்தி
ஒன்று என்னை தேடிவரும்
தினம்தோறும் உன்னிடம் இருந்து....

உன்கரம் பற்றிய பின்னரே
காதல் செய்ய ஆசைபட்டேன்
அந்நாள் வாரும் வரை
காத்திருக்கிறேன்..நான்
இன்று வரை
சொல்லியது இல்லை
உன்னை நான்
நேசிக்கிறேன் என்று..!

சிதறிய எண்ணங்களை
என்னுள்
சேர்க்கவே உனது பார்வையில்
விழுகிறேன் தினமும்..
ஏனென்றால்...?
எனது எண்ணங்களை
வண்ணங்களாக்கும்
திறன் உனது
பார்வைக்கு மட்டுமே....
உண்டு என்பதால்.....!

இதழ் பிரித்து நீ
உதிர்க்கும் வார்த்தைக்காகவே..
காத்திருக்கிறேன்..
என் இதயம் திறந்து..
உனக்காக..
விழி மூடும் முன்னே....
விளகேத்தி வை..
என் வாழ்க்கை வெளிச்சமாகட்டும்
உன்னால்...!

மண்ணில் நீரை தேடி
பரவும் வேரை போல..
உனது இதயத்தை
தேடி பரவுகின்றன...
கவிதை வழியாக...
எனது காதல்!

நீ உதிர்த்த வார்த்தைகளை
பூக்களை போல
சேகரிக்கிறேன்..
என் இதய தட்டில்..
ஏன் தெரியுமா?
இதயம் கவர்ந்த
உனக்கு கவிதை
மாலை சூட!

மலர் பறித்த கைகள்...
இதழின் மென்மையை
உணர்ந்தது இல்லை
ஒரு நாளும்...
உன் கை இதழ்கள்.
பட்டபோது உணர்ந்தேனடி
இன்று..
மென்மையின் தன்மையை.!

உன் கூந்தலில் இருக்கும்
வளைவு நெளிவுகளில்
என் வார்த்தைகளும்
பரிணமிக்கின்றன
கவிதையாக...!

நீ இன்றி ஒரு அணுவும்
அசையாது என்னுள்.
நீ பேசாத பொழுதுகள்
விடியாதா நாட்கள்
என் வாழ்கையில்..
முடிவு பெறாத
என் கவிதைக்கு
முற்றுபுள்ளி வைத்துவிடு
என் காதலுக்கும் சேர்த்து....!

Lunax Free Premium Blogger™ template by Introblogger