எனக்கென்று ஒரு உலகம்
அதில் நீயும்
உன்னைச் சார்ந்தவைகளும்.....
உலக பேரழகியின் புன்னகையும்
உன்னத புகழின் ஒரு துளியும்
குழலிசையாய் பெருகிவந்து
என்னைத் தொடாத ஒரு
தூர வெளியில் உன்
ஞாபகங்களின் ஒவ்வொரு சொட்டிலும்
இடையறாது நனைந்துகொண்டிருப்பேன்
ஒரு நாள்
மரணம் வந்து என் வாசல் தட்டும்
அழைத்து உபசரிப்பேன்
உன் நலன் விசாரிப்பேன் - பின்
நீ உறைந்த அதன் வாகனத்தில்
மழை தூரலில் ஜன்னல் விரும்பும் குழந்தையாய்
உன்னருகில் வருவேன்
அதுவரை
வாழ்ந்துவிட்டு போகிறேன்
நீ வாழ்ந்த இடத்தில்
நீ விரும்பிய பூக்களோடு
உன் பாடலை பாடிக்கொண்டு.......


முதல் தேதிகளில்
கவலைகளை
மறக்க எண்ணி...!

ரயிலோ
பஸ்ஸோ
நெரிசல்களில் சிக்கி
வேலைக்கும் வீட்டுமாய்
தினசரி அல்லல்கள்..

மாதம் பிறந்துவிட்டது
பாலுக்கும் அரிசிக்கும்
பாக்கி போக
மிச்சப்பட்டிருப்பது
விரல்கள் மட்டுமே

தினசரி
விடிகிறது பொழுது
கழிகிறது நிமிஷம்
காலம் என்ற ஓட்டை பானையில்
உயிர் சிந்தி
உழைப்பை கொட்டி

தொலைந்து போகிறது வாழ்க்கை!

மழலைப் பருவத்தில்
பார்த்து வியக்க
ஒரு நட்பு...

குழந்தைப் பருவத்தில்
ஓடி விளையாட
ஒரு நட்பு...

காளைப் பருவத்தில்
ஊர் சுற்ற
ஒரு நட்பு...

வாலிபப் பருவத்தில்
பேசி ரசிக்க
ஒரு நட்பு...

முதிர்ந்த பின்
அனுபவங்களைப்
பகிர்ந்து கொள்ள
ஒரு நட்பு...

நட்புகள் ஆயிரம் இருந்தும்
நட்பின் தேவை குறையவில்லை...

தேவையின் போது
தோள்களில் சாய
நட்பு வேண்டும்...

துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க
நட்பு வேண்டும்...

மகிழ்ச்சியின் போது
மனம் மகிழ
நட்பு வேண்டும்...

நானாக நானிருக்க
நட்பே...
நீ எனக்கு
நட்பாக வேண்டும்..

காலில் 'நூல்' வலை சிக்கிக்
கவிழ்ந்து கிடந்தாய்
தமிழ் வாளால் அறுத்து
நிமிர்ந்து எழுந்தாய்..

படிப்பறியா பாமரன் வாய்
உடைப்பெடுத்த ஆறாய் - தமிழ்
உச்சரிக்கக் கற்றுத் தந்தாய்..

குருட்டு அதிர்ஷ்டமாய் - நீ
கொடுத்த புகழால்
தறிகெட்டுத் திரிந்த பலரைத்
தடுமாறி விழ வைத்தாய்...

உன்னை முகமூடியாய் அணிந்த
காரியவாதிகள் சிலரை
'மேல்' ஏற்றியும் வைத்தாய்..

எப்போதும் அரைத்த மாவை
எப்போதாவது பறித்த புதுப்பூவை
கொடுத்து நடக்கிறாய்...

உன்னிடம் ஒரேயொரு கேள்வி..

உன் வெளிச்சத்தில்
மிளிர்ந்தவர்களை விட
உனது இருட்டுக்குள்
தொலைந்தவர்களே அதிகமாய்
இருப்பது ஏன்?

நண்பிகள்....

பிறந்த நாளை மறந்ததால்கோபம் வித்யாவுக்கு।தேர்வு செய்த பரிசுப் பொருள்பிடிக்கவில்லை உமாவுக்கு.பிறர் மத்தியில்'குண்டு' என்றதால் கோபம்ராதாவுக்கு.வாங்கி வரச் சொன்னபியூர் காப்பிப் பொடியைகொண்டு வராததால்முகந்திருப்பிய லட்சுமி.ஒவ்வொருவரிடமும்பத்துப் பத்து நிமிஷம்கெஞ்சியதில்கிடைக்கவில்லை சமாதானம்.அலுவலகம் விட்டுத் திரும்பியதும்'வீட்டு வாசப்படி கூட மிதிக்கலை॥மனுஷன்னு கூடப் பார்க்க மாட்டியா?எப்ப வருவான்.. வேலை வைக்கலாமுன்னு'புவனாவிடம் சீறி விழுந்தபோதுஎனக்குள் இருந்த மிருகத்திற்குஎத்தனை கால்கள்?

Lunax Free Premium Blogger™ template by Introblogger