காலில் 'நூல்' வலை சிக்கிக்
கவிழ்ந்து கிடந்தாய்
தமிழ் வாளால் அறுத்து
நிமிர்ந்து எழுந்தாய்..

படிப்பறியா பாமரன் வாய்
உடைப்பெடுத்த ஆறாய் - தமிழ்
உச்சரிக்கக் கற்றுத் தந்தாய்..

குருட்டு அதிர்ஷ்டமாய் - நீ
கொடுத்த புகழால்
தறிகெட்டுத் திரிந்த பலரைத்
தடுமாறி விழ வைத்தாய்...

உன்னை முகமூடியாய் அணிந்த
காரியவாதிகள் சிலரை
'மேல்' ஏற்றியும் வைத்தாய்..

எப்போதும் அரைத்த மாவை
எப்போதாவது பறித்த புதுப்பூவை
கொடுத்து நடக்கிறாய்...

உன்னிடம் ஒரேயொரு கேள்வி..

உன் வெளிச்சத்தில்
மிளிர்ந்தவர்களை விட
உனது இருட்டுக்குள்
தொலைந்தவர்களே அதிகமாய்
இருப்பது ஏன்?

0 comments:

Lunax Free Premium Blogger™ template by Introblogger