நான் யார் என்பதை காலம் சொல்லட்டும் நீங்கள் சொல்லாதீர்

துதிப்போர்க்கு தொங்குதல்போம் வைரஸ்போம்-நெஞ்சில்
பதிப்போர்க்கு பிராட்பேண்ட் களிப்பேற்றும்
கீபோர்டு விரைந்தோடும் அனுதினமும் கணினி சிஸ்ட கவசமதனை
பின்னிப்பெடலெடுத்த பில்கேட்ஸ்தனை
உன்னிப்புடன் நெஞ்சே குறி!

காக்க காக்க கம்ப்யூட்டர் காக்க
அடியேன் சிஸ்ட அழகுவேல் காக்க
வின்டோசைக் காக்க வேலன் வருக
கனெக்ஷன் கொடுத்து கனகவேல் காக்க
இன்டெர்நெட் தன்னை இனியவேல் காக்க
பன்னிருவிழியால் பாஸ்வேர்ட் காக்க
செப்பிய வால்யூம் செவ்வேல் காக்க
வீடியோ ஆடியோ வெற்றி வேல் காக்க
முப்பத்திரு ஃபைல் முனைவேல் காக்க
வைரஸ் வாராமல் வைரவேல் காக்க
சேவிங் தன்னை செந்தில் வேல் காக்க
எக்ஸ்டர்நல் மோடம் எதிர் வேல் காக்க
பில்ட் இன்மோடம் பிரிய வேல் காக்க
ஈமெயில் தன்னை இணையவேல் காக்க
மவுசை மகேசன் மைந்தன் காக்க
எர்ரர் வாராமல் எழில் வேல் காக்க
அடியேன் ப்ரின்டர் அமுதவேல் காக்க
எக்ஸ்ப்ளோரரை ஏரகத்தான் வேல் காக்க
அடியேன் ப்ரௌஸ் செய்கையில் அயில் வேல் காக்க
அல்லல் படுத்தும் அடங்கா எரர்கள்
நில்லாதோட நீ எனக்கருள்வாய்
ஹாங் ப்ராப்ளமும்
ஹார்ட் டிஸ்க் ப்ராபளமும்
என் பெயர் சொல்லவும்
இடி விழுந்தோடிட
ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை
அலறவே வைத்திடும்
ஃப்ளக்சுவேஷன் பவர் சார்ஜுகளும்
வாட்டம் விளைக்கும் வோல்ட்டேஜுகளும்
அடியேனைக் கண்டால் அலறி கலங்கிட
பிரிண்டர் சற்றும் பிழையாதிருக்க
பேப்பர் ஃபீடிங் சூப்பராய்த் திகழ
மை சப்ளை செய்யும் காட்ரிட்ஜ் தன்னை
மைய நடனம் செய்யும் மயில் வாகனனார் காக்க
மூவாகல் மூர்க்கம் செய்யும்
மவுஸ் என்கை பட்டதும் ஸ்மூத்தாக
நகர நீ எனக்கருள்வாய்
கிர்ரு, கிர்ரு, கிரு, கிரு என
டிஸ்கனெக்ட் ஆகும் டெலிபோன்களை
போட்டதும் கனெக்ட் ஆக புனிதவேல் காக்க
கன்னா பின்னாவென்று வரும்
கமான்ட் இன்டட் ரெப்டுகளை
கந்தன் கைவேல் காக்க
அல்லல் படுத்தும் அடங்கா பசங்களும்
பந்துகள் ஆடும்பாலர் பட்டாளமும்
மானிட்டர் பக்கம் வந்து விடாமல்
என் பெயர் சொல்லவும் எகிறியே ஓட
ரேமும், ரோமும் மெமரியோடிருக்க
அனைத்து ஃபோர்டர்ஸீம்
ஆயுளோடு விளங்க
டௌன்லோடு, அப்லோடு டக்கராய்
விளங்கும் சிஸ்டம் பெற்று அடியேன்
சிறப்புடன் வாழ்க.
அலட்சியம் செய்யும் அலசியஸர்வீஸhர்
அழைத்ததும் வந்திட அருள் நீ புரிவாய்
ஷட்டௌன் தடங்கல்
சட்டென்று நீங்க
ஷண்முகன் நீயும் சடுதியில் வருக
கணினி சிஸ்டம் கவசம் இதனை
சிந்தை கலங்காது கேட்பவர்கள்,
படிப்பவர்கள் எந்நாளும் பாடாய்
படுத்தாத கணினியுடன் வேலை செய்வார்.
வாழ்க கணினி. வளர்க மவுஸ்.

எ‌ந்த‌ப் பொருளாக இரு‌ந்தாலு‌ம் முறையாக‌ப் பராம‌ரி‌க்க வே‌ண்டியது ‌மிகவு‌ம் அவ‌சியமாகு‌ம். அதுபோல‌த்தா‌ன் க‌ணி‌னியு‌ம்.

எவ்வளவு கூடுதல் கான்பிகேரேஷனில் கம்ப்யூட்டர் வங்கினாலும், அதை சரியாக பராமரிக்காவிட்டால், அத‌ன் செய‌ல்பாடு குறை‌ந்து‌விடு‌ம்.

எனவே ஒரு க‌ணி‌னியை ‌சிற‌ப்பான முறை‌யி‌ல் பராம‌ரி‌ப்பது எ‌வ்வாறு எ‌ன்று பா‌ர்‌ப்போ‌ம்.

முக்கிய விஷயங்கள் :
தினமும் ரிசைக்கிள் பின்னை காலி செய்ய வேண்டும்.

எ‌ப்போது‌ம் இய‌ங்‌கி‌க் கொ‌ண்டிரு‌க்க ‌விடாம‌ல், ‌சில நேர‌ங்க‌ளி‌லாவது ஆ‌ப் செ‌ய்து க‌ணி‌னி‌க்கு ஓ‌ய்வு கொடு‌ங்க‌ள்.

கம்ப்யூட்டரில் உள்ள, நீண்ட காலம் நாம் பயன்படுத்தாத புரோக்கிராம் மற்றும் சாப்ட்வேர்களை நீக்கிவிடவேண்டும்.

தேவைய‌ற்ற, பய‌ன்பா‌ட்டி‌ல் இ‌ல்லாத பை‌ல்களையு‌ம் ‌நீ‌க்‌கி‌விடு‌ங்க‌ள். அதனை ‌ரீ சை‌க்‌கி‌ள் ‌பி‌ன்‌னி‌ல் இரு‌ந்து‌ம் ‌நீ‌க்கு‌ங்க‌ள்.

டெம்பரவரி இண்டர்நெட் பைல்களை அழித்து விடுங்கள்.

அவ்வப்போது டிஸ்க் கிளீன் அப் செய்யுங்கள்.

குறைந்த பட்சம் மாதம் ஒரு முறையாவது டிஸ்க் டிபிராக்மெண்டேஷன் செய்யுங்கள். அல்லது எப்போதெல்லாம் அதிக வேலை கொடுக்கிறீர்களோ, அதற்கு பிறகு டிஸ்க் டிபிராக்மெண்ட் செய்வது நல்லது.

குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏரர் செக்கிங் யுடிலிட்டி மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறை ஹார்டு டிஸ்கை கம்ப்யூட்டர் பயன்படுத்தும்போதும், சில வேண்டாத செக்டார்கள் உருவாகும். அவற்றை நீக்க, கம்ப்யூட்டரில் உள்ள எரர் செக்கிங் யுடிலிட்டி ஸ்கேனை பயன்படுத்த வேண்டும்.

தேவையில்லாத சாப்ட்வேர் தொகுப்புக்கள், மொழித்தொகுப்புக்கள் போன்றவற்றை நீக்கிவிடலாம். தேவைப்படும் நேரத்தில் அவற்றை இணையத்திலிருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

ஸ்பைவேர் எனப்படும் ரகசியங்களை திருடும் சாப்ட்வேர்களில் இருந்து கம்ப்யூட்டரை பாதுகாத்து கொள்ளவேண்டும். இதற்கான சாப்ட்வேர் தொகுப்புக்கள், விண்டோஸ் உடன் கிடைக்கின்றன.

தினமும் அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆண்ட்டி வைரஸ் ஸ்கேனை இயக்கி, கம்ப்யூட்டர் போல்டர்கள், டிரைவ்களில் உள்ள வைரஸ்களை நீக்க வேண்டும்.

ஒவ்வொரு முறை டவுன்லோடு செய்யும்போதும், வைரஸ் ஸ்கேன் செய்ய வேண்டும்.

யு.பி.எ‌ஸ், ஸ்பீக்கர் போன்றவற்றை கம்ப்யூட்டருடன் இணைக்கும் போர்டுகளை கவனமாக சொருக வேண்டும். போர்டு உடைந்துவிட்டால், சரி செய்ய செலவு அதிகம் பிடிக்கும்.

முறைப்படியே, கம்ப்யூட்டரை ஷட்- டவுன் செய்ய வேண்டும். ஆன்/ஆப் சுவிட்சை பயன்படுத்தவேண்டாம்.
கம்ப்யூட்டர் அதிக சூடு ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அவ்வப்போது நீங்களும் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்; கம்ப்யூட்டருக்கு, ஓய்வு கொடுங்கள்.

யு.பி.எ‌ஸ். மூலமே கம்ப்யூட்டரை இயக்குங்கள். இதனால் மின் தடை ஏற்படும்போது, கம்ப்யூட்டர் திடீரென க்ராஷ் ஆவதில் இருந்து தப்பிக்கும்.

ஆண்டுக்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ சி.பி.யு மற்றும் மானிட்டரை திறந்து அதில் சேர்ந்திருக்கும் மெல்லிய தூசுக்களை அப்புறப்படுத்துங்கள்.

எ‌ப்போது‌ம் கு‌ளி‌ர்‌ந்த அறை‌யி‌ல் க‌ணி‌னி இரு‌க்க வே‌ண்டியது ‌மிகவு‌ம் அவ‌சிய‌ம். அ‌ல்லது குறை‌ந்தப‌ட்ச‌ம் ந‌ல்ல கா‌ற்றோ‌ட்டமான இட‌த்‌திலாவது இரு‌க்க வே‌ண்டு‌ம்.

நீ என்ன
என்பதில் இன்னமும்
நிலவுகிறது எனக்குள்
ஒரு குழப்பம்...

மூடியே இருக்கிறாய்...
பலவந்தமாய் உன் இதழ்
பிரிக்க எனக்கு விருப்பமில்லை...

தானாய் விரிந்து விட
உனக்கும் வரவில்லை...

இப்படிச் செதுக்கலாம் உன்னையென
நான் யத்தனிக்கையில்
எப்படியாயினும் அங்கொன்றும்
இங்கொன்றுமாய் சிதைந்தே
போகலாம்...

நல்லவேளை!
என்னிடமிருந்த முத்து மணிகள்
இன்னமும் என்னிடத்திலேயே...

தோழியாகவே இருந்துவிடேன்!
நாம் செல்லும் சாலை
எங்காவது பிரிகிறதா பார்ப்போம்...

ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம் ஒருவர் கேட்டார் ‍‍‍‍‍‍~ எதற்க்காக இத்தனை கஷ்டப்படுகிறாய்?

நான் கேட்டேன் ~ கஷ்டப்படாமல் எப்படி வாழ்க்கையை நடத்தமுடியும்?

அதற்க்கு அவர் சிரித்தபடி சொன்னார் ~ என்னைப்பார், ஒரு ரூபாய்க்கு அரிசியும், ரூ. 140 க்கு பருப்பும் (ஆடு அரைப்பணம் ------ முக்கப்பணம்) வாங்கி சமைத்து உண்டு உறங்கிவிடுவேன். போரடித்தால் அரசு வண்ணத்தொலைக்காட்சியில் திரைப்படம் பார்த்துவிடுவேன், உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் சென்று உயர் சிகிச்சை பெற்றுவிடுவேன் ராஜமரியாதையுடன் (பொதுவார்டில் இருந்தால் மட்டுமெ என்பது முக்கியம்).

நான் கேட்டேன் ~ உழைக்காமல் எப்படி இத்தனையும் கிடைக்கும் என்று?

அதற்க்கு அதிர சிரித்துவிட்டு சொன்னார் ~ நான் யார் தெரியுமா? தமிழ்நாட்டின் குடிமகன், என் நாட்டில் உணவுக்கு அரிசி ஒரு ரூபாய், சமைப்பதற்க்கு எரிவாயு அடுப்பும் இலவசம், பொழுதுபோக்கிற்க்கு(பல அறிய அறிவுசார்ந்த நிகழ்ச்சிகள் மூலம் ) வண்ணத்தொலைக்காட்சிபெட்டி மின்சாரத்துடன் இலவசம் , உழைக்காமல் நோய் வந்தால் குடுப்பத்தார்க்கு உயிர்காக்கும் உயர்சிகிச்சையும் இலவசம் பிறகு எதற்க்காக உழைக்கவேண்டும்!?

அதற்க்கு நான் கேட்டேன் ~ உன் எதிர்கால சந்ததியின் நிலை என்ன?

அவர் பலமாக நகைத்தபடி சொன்னார் ~ மனைவி பிள்ளை பெற்றால் ரூ 6000 ஊட்டச்சததுடன் இலவசம், பிறகு பள்ளியில் கல்வியுடன்(ஏதோ) மதியஉணவு முட்டையுடன் இலவசம், பாடம் படிக்க புத்தகமும் இலவசம், பள்ளிசெல்ல பேருந்து கட்டண அட்டை இலவசம், தேவையென்றால் சைக்கிளும் இலவசம், பெண் திருமணத்தின்போது உதவித்தொகை ரூ. 15000 இலவசம். மகள் பிள்ளை பெற்றால் இதே இலவசங்கள் கிடைக்கும் அவர்களது வாழ்க்கையிலும் பின் எதற்க்கு உழைக்கவேண்டும்?!

வியந்துபோனேன் நான்!!!

என்னுயிர் தமிழகமே எவ்வளவு காலம் இந்நிலமை தொடரும்? இலவசம் என்பதற்க்கு இரண்டு அர்த்தமுண்டு ஒன்று கையூட்டு, மற்றொன்று பிச்சை!! இதில் நீ எந்த வகை? இதன் பின்விளைவென்ன? உழைக்காமல் உண்டு யாருக்கும் உதவாது சோம்பேறியாகி விடுகிறாய். ~ இந்த இலவசங்கள் நின்றுபோனால் உன்நிலைமை என்ன? உழைப்பவர் சேமிப்பைக் களவாடத் தலைப்படுவாய்!

இதே நிலை தொடர்ந்தால், இலவசங்கள் வள்ர்ந்தால் அமைதியான தமிழகம் கள்வர்களின் பூமியாய் மாறிடும் நிலை வெகுதொலைவில் இல்லை..

தமிழா விழித்திடு ~ உழைத்திடு!
இலவசங்களை வெறுத்திடு ‍~ அழித்திடு!!
தமிழகத்தை தரணியில் உயர்த்திடு!!!

நாளைய தமிழகம் நம் கையில்
மானமுள்ள தமிழனே சிந்திப்பாயா!!

Lunax Free Premium Blogger™ template by Introblogger