ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம் ஒருவர் கேட்டார் ‍‍‍‍‍‍~ எதற்க்காக இத்தனை கஷ்டப்படுகிறாய்?

நான் கேட்டேன் ~ கஷ்டப்படாமல் எப்படி வாழ்க்கையை நடத்தமுடியும்?

அதற்க்கு அவர் சிரித்தபடி சொன்னார் ~ என்னைப்பார், ஒரு ரூபாய்க்கு அரிசியும், ரூ. 140 க்கு பருப்பும் (ஆடு அரைப்பணம் ------ முக்கப்பணம்) வாங்கி சமைத்து உண்டு உறங்கிவிடுவேன். போரடித்தால் அரசு வண்ணத்தொலைக்காட்சியில் திரைப்படம் பார்த்துவிடுவேன், உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் சென்று உயர் சிகிச்சை பெற்றுவிடுவேன் ராஜமரியாதையுடன் (பொதுவார்டில் இருந்தால் மட்டுமெ என்பது முக்கியம்).

நான் கேட்டேன் ~ உழைக்காமல் எப்படி இத்தனையும் கிடைக்கும் என்று?

அதற்க்கு அதிர சிரித்துவிட்டு சொன்னார் ~ நான் யார் தெரியுமா? தமிழ்நாட்டின் குடிமகன், என் நாட்டில் உணவுக்கு அரிசி ஒரு ரூபாய், சமைப்பதற்க்கு எரிவாயு அடுப்பும் இலவசம், பொழுதுபோக்கிற்க்கு(பல அறிய அறிவுசார்ந்த நிகழ்ச்சிகள் மூலம் ) வண்ணத்தொலைக்காட்சிபெட்டி மின்சாரத்துடன் இலவசம் , உழைக்காமல் நோய் வந்தால் குடுப்பத்தார்க்கு உயிர்காக்கும் உயர்சிகிச்சையும் இலவசம் பிறகு எதற்க்காக உழைக்கவேண்டும்!?

அதற்க்கு நான் கேட்டேன் ~ உன் எதிர்கால சந்ததியின் நிலை என்ன?

அவர் பலமாக நகைத்தபடி சொன்னார் ~ மனைவி பிள்ளை பெற்றால் ரூ 6000 ஊட்டச்சததுடன் இலவசம், பிறகு பள்ளியில் கல்வியுடன்(ஏதோ) மதியஉணவு முட்டையுடன் இலவசம், பாடம் படிக்க புத்தகமும் இலவசம், பள்ளிசெல்ல பேருந்து கட்டண அட்டை இலவசம், தேவையென்றால் சைக்கிளும் இலவசம், பெண் திருமணத்தின்போது உதவித்தொகை ரூ. 15000 இலவசம். மகள் பிள்ளை பெற்றால் இதே இலவசங்கள் கிடைக்கும் அவர்களது வாழ்க்கையிலும் பின் எதற்க்கு உழைக்கவேண்டும்?!

வியந்துபோனேன் நான்!!!

என்னுயிர் தமிழகமே எவ்வளவு காலம் இந்நிலமை தொடரும்? இலவசம் என்பதற்க்கு இரண்டு அர்த்தமுண்டு ஒன்று கையூட்டு, மற்றொன்று பிச்சை!! இதில் நீ எந்த வகை? இதன் பின்விளைவென்ன? உழைக்காமல் உண்டு யாருக்கும் உதவாது சோம்பேறியாகி விடுகிறாய். ~ இந்த இலவசங்கள் நின்றுபோனால் உன்நிலைமை என்ன? உழைப்பவர் சேமிப்பைக் களவாடத் தலைப்படுவாய்!

இதே நிலை தொடர்ந்தால், இலவசங்கள் வள்ர்ந்தால் அமைதியான தமிழகம் கள்வர்களின் பூமியாய் மாறிடும் நிலை வெகுதொலைவில் இல்லை..

தமிழா விழித்திடு ~ உழைத்திடு!
இலவசங்களை வெறுத்திடு ‍~ அழித்திடு!!
தமிழகத்தை தரணியில் உயர்த்திடு!!!

நாளைய தமிழகம் நம் கையில்
மானமுள்ள தமிழனே சிந்திப்பாயா!!

0 comments:

Lunax Free Premium Blogger™ template by Introblogger